/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறட்சியில் உப்பாறு படுகை அணைக்கு நீர் வழங்க கோரிக்கை
/
வறட்சியில் உப்பாறு படுகை அணைக்கு நீர் வழங்க கோரிக்கை
வறட்சியில் உப்பாறு படுகை அணைக்கு நீர் வழங்க கோரிக்கை
வறட்சியில் உப்பாறு படுகை அணைக்கு நீர் வழங்க கோரிக்கை
ADDED : செப் 04, 2024 01:31 AM
உடுமலை;நிலத்தடி நீர் மட்டம் உயரவும், குடிநீர் தேவைக்காகவும், பி.ஏ.பி., கால்வாயில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தாராபுரம் அருகே கெத்தல்ரேவ் பகுதியில், உப்பாறு அணை அமைந்துள்ளது. பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், இரண்டு மண்டலங்கள் மட்டுமே பாசனம் இருந்த போது, உப்பாறு அணைக்கு, பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
அரசூர் ஷட்டரில் இருந்து, உப்பாறு வழியாக, அணைக்கு தண்ணீர் செல்லும். பி.ஏ.பி., திட்டம் விரிவுபடுத்தப்பட்ட பிறகு, பிரதான கால்வாயிலிருந்து, உப்பாறு ஓடை வழியாக, தண்ணீர் திறப்பது அரிதாக மாறியது.
குடிமங்கலம், குண்டடம் மற்றும் தாராபுரம் ஒன்றியங்களை சேர்ந்த கிராம மக்கள் அளிக்கும் கோரிக்கை அடிப்படையில், உப்பாறு ஓடையில், கடந்த சில ஆண்டுகளாக, அரசாணை அடிப்படையில், தண்ணீர் திறக்கப்படுகிறது.
தற்போது, போதிய மழை இல்லாமல், உப்பாறு அணை பாசனப்பகுதிகள் மற்றும் வழியோர கிராமங்களில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதித்துள்ளது. பி.ஏ.பி., திட்டத்திலிருந்து, உப்பாறு ஓடை வழியாக தண்ணீர் திறந்து நீண்ட காலமாகிறது.
இதனால், ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் வறண்டுள்ளன. பாசனப்பகுதிகளுக்கு பாதிப்பு இல்லாமல், உப்பாறு அணைக்கு ஓடை வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என வழியோர கிராம விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.