ADDED : ஆக 18, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் - பொள்ளாச்சி ரோடு, வடுகபாளையம் - ஹாஸ்டல் ரோடு சந்திக்கும் இடத்தில், கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள சிமென்ட் சிலாப், சமீபத்தில் கனரக வாகனம் ஒன்று இறங்கியதன் காரணமாக உடைந்தது. உடைந்த பகுதிகள் மேலே நீட்டியபடி கால்வாய்க்குள் கிடக்கின்றன.
இது விபத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது. நெடுஞ்சாலை என்பதுடன் மக்கள் கூடும் இடம் என்பதால், விபத்து ஏற்படும் முன் உடைந்த சிமென்ட் சிலாப்களை அகற்றி, கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

