நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 18வது வார்டு, கொடிக்கம்பம் பகுதியில் மாநகராட்சி சார்பில், புதிதாக சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, தனக்கு சொந்தமான இடம் என கூறி வந்துள்ளார். இதனால் சாலை அமைக்கும் பணி தாமதமானது.
எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் நேற்று மாலை கொடிக்கம்பம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வடக்கு போலீசார், ஆக்கிரமிப்பை அகற்றினர். இதனால், மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.