/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வழியை அடைக்கும் ரயில்வே; பொதுமக்கள் சாலை மறியல்
/
வழியை அடைக்கும் ரயில்வே; பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஆக 01, 2024 01:38 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, 37 வது வார்டு கல்லம்பாளையத்தில், நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர். ரயில்வே நிர்வாகம் சார்பில், அணைப்பாளையம் மற்றும் கல்லம்பாளையம் ஆகிய, இரு பகுதிகளில் கம்பி வேலிகளை அமைக்கும் பணி நடந்தது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்தாத நிலை ஏற்படும் என்று மக்கள் மத்தியில் புகார் எழுந்தது.
இதனால், இப்பணியை உடனடியாக கைவிட வேண்டும் என கூறி, கல்லம்பாளையத்தில் பொது மக்கள் துணை மேயர் பாலசுப்ரமணியம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், ரயில்வே போலீசார் பேச்சு நடத்தினர். அதில், பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதில், பேசி முடிவு எடுக்கும் வரை பணிகளை தொடரக்கூடாது வலியுறுத்தினர். அதன்பின், தற்காலிகமாக பணிகள் கைவிடப்பட்டது. இதுதொடர்பாக, 2ம் தேதி எம்.பி., சுப்பராயன் தலைமையில் பேச்சு நடத்த உள்ளனர்.