/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோடு சந்திப்பு மேம்பாட்டு பணி; நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு
/
ரோடு சந்திப்பு மேம்பாட்டு பணி; நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு
ரோடு சந்திப்பு மேம்பாட்டு பணி; நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு
ரோடு சந்திப்பு மேம்பாட்டு பணி; நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஆக 21, 2024 11:46 PM

உடுமலை : உடுமலை அருகே ரோடு சந்திப்பு மேம்பாட்டு பணிகளை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உடுமலை அருகே, தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் புதுப்பாளையம் அருகே கோழிக்குட்டை மற்றும் அடிவள்ளி கிராம ரோடுகள் பிரிகிறது. இந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த சந்திப்பு பகுதியில் விபத்து மற்றும் நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டனர். இத்திட்டத்துக்கு தமிழக அரசு 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்க உள்ளது. பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள இடத்தில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோட்ட பொறியாளர் முருகபூபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சந்திப்பில் ரோட்டை இருபுறங்களிலும் விரிவுபடுத்தி சென்டர் மீடியன் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எனவே, இப்பகுதியில் விரைவில் மேம்பாட்டுப்பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.