ADDED : ஜூன் 17, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
உடுமலை: கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் உடுமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் உட்கோட்டத்தலைவர் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். கோட்டச்செயலாளர் செல்லமுத்து, கோட்டத்தலைவர் வெங்கடசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தாராபுரம் கோட்டத்தில் சாலை பணியாளர்களின் முதுநிலை பட்டியலை அநீதியாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், கோட்டப்பொறியாளரை கண்டித்தும் கோஷமிட்டனர்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாநிலத்தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் உள்ளிட்ட பலர் பேசினர். உட்கோட்ட பொருளாளர் கருப்புசாமி நன்றி தெரிவித்தார்.
