ADDED : மார் 03, 2025 06:26 AM

திருப்பூர் : 'நட்பு பரிமாற்றம்' திட்டத்தில், ஸ்பெயின் நாட்டு ரோட்டரி குழுவினர், திருப்பூர் வந்து, சமுதாய பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
ரோட்டரி அமைப்புகள் உலக அளவில் இயங்கி வருவதால், ஒரு நாட்டை சேர்ந்த ரோட்டரி குழு, மற்ற நாடுகளுக்கு சென்றுவரும், 'நட்பு பரிமாற்றம்' திட்டம் நடைமுறையில் உள்ளது.
முன்னாள் ரோட்டரி கவர்னர் மற்றும் மூன்று தம்பதியினர் என, ஏழு பேர் கொண்ட ஸ்பெயின் நாட்டு குழு, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்ட பகுதிகளை பார்வையிட வந்துள்ளது. இரண்டு நாட்கள் திட்டத்துடன், திருப்பூருக்கு நேற்று வந்திருந்தனர்.
திருப்பூர் வடக்கு ரோட்டரி, திருப்பூர் கிழக்கு ரோட்டரி, ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி, மெட்டல் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள், ரோட்டரி திட்டங்களை விளக்கினர். கொடுவாய், சொர்க்கம் மின்மயானம், திருப்பூரில் நடந்து வரும் புற்றுநோய் ஆராய்ச்சி மைய பணிகள், ரோட்டரி ரத்தவங்கி, டயாலிசிஸ் மையம் உள்ளிட்ட பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
திருப்பூர் ரோட்டரி அமைப்பினர், சொந்த பணத்தில் சமூக சேவை செய்து வருவதை பாராட்டிய ஸ்பெயின் நாட்டு ரோட்டரி குழுவினர், திருப்பூர் ரோட்டரியின் எதிர்கால திட்டத்தில், தாங்களும் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவித்துள்ளாக, திருப்பூர் ரோட்டரி நிர்வாகிகள்தெரிவித்தனர்.