/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டோரம் கொட்டி கிடந்த மல்லிகை பூக்கள்
/
ரோட்டோரம் கொட்டி கிடந்த மல்லிகை பூக்கள்
ADDED : மே 01, 2024 12:53 AM

திருப்பூர்;'அவிநாசி - சேவூர் ரோட்டில் நேற்று காலை, ரோட்டோரம், ஏறத்தாழ, 100 கிலோ எடையுள்ள மல்லிகை பூக்கள் ஒரு குவியலாக கொட்டிக் கிடந்தது. மலர் உற்பத்தி செய்யும் விவசாயி யாராவது கொட்டி சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
வழக்கமாக பூக்களுக்கு கிராக்கி ஏற்படும் விசேஷ நாட்கள், பண்டிகை நாட்களில், மல்லிகை கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும்.
சாதாரண நாட்களில், மிகவும் குறைந்த விலைக்கு விற்பனையாகும். அப்போது கிலோ நுாறு ரூபாய்க்குகுறைவாகவே விற்பனையாகும்.
இந்நிலையில், நேற்று மல்லிகை பூவுக்கு குறிப்பிட்ட அளவு விலை கிடைக்காத நிலையிலோ, மார்க்கெட் மற்றும் கடைகளில் அதற்கு கேள்வி இல்லாத காரணத்தாலோ அதை விற்பனை செய்ய முடியாத விவசாயி ஒருவர் தான் இதை ரோட்டோரம் கொட்டிச் சென்றிருக்கலாம் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.
ரோட்டில் கொட்டிக் கிடந்த நிலையிலும் அந்த மலர்களை யாரும் எடுத்துச் செல்வதில் கூட ஆர்வம் காட்டவில்லை.