/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரவுடி கொலை வழக்கு; இதுவரை 7 பேர் கைது
/
ரவுடி கொலை வழக்கு; இதுவரை 7 பேர் கைது
ADDED : ஆக 15, 2024 11:59 PM

பல்லடம் : சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் அக்னி ராஜ், 19. சட்டக் கல்லுாரி மாணவரான இவர், கடந்த, 2019ம் ஆண்டு, இதே பகுதியை சேர்ந்த வினோத் கண்ணன், 30 ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதற்குப் பழிவாங்க நினைத்த அக்னி ராஜின் ஆதரவாளர்கள், 'அக்னி பிரதர்ஸ்' என்ற குழுவை ஆரம்பித்து, பழிவாங்கும் வேட்டையை துவக்கினர்.
ஏற்கனவே மூன்று பேர் கொல்லப்பட்ட நிலையில், பல்லடம் அருகே ரவுடி வினோத் கண்ணனை தலை சிதைத்துக் கொன்றனர்.
பல்லடம் போலீசார் தனிப்படை அமைத்து கோவையில் பதுங்கி இருந்த காளீஸ்வரன் 24, பிரபுதேவா 31, சாமிநாதன் 53, நிதிஷ்குமார் 24 ஆகிய நான்கு பேரை முதலில் கைது செய்தனர்.
இதற்கிடையே அக்னிராஜின் தந்தை தங்கமணி, 48, அஜய் தேவ்கன், 22, சுரேஷ், 25 ஆகிய மூவரும் பல்லடம் கோர்ட்டில் சரணடைந்தனர். மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
'அக்னி பிரதர்ஸ்' குழுவில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகள் தங்கராஜ், ராஜேஷ் ஆகிய இருவரும் இன்னும் பிடிபடாமல் உள்ளனர்.

