/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகை வியாபாரியிடம் போலீசாக நடித்து ரூ.1.10 கோடி வழிப்பறி
/
நகை வியாபாரியிடம் போலீசாக நடித்து ரூ.1.10 கோடி வழிப்பறி
நகை வியாபாரியிடம் போலீசாக நடித்து ரூ.1.10 கோடி வழிப்பறி
நகை வியாபாரியிடம் போலீசாக நடித்து ரூ.1.10 கோடி வழிப்பறி
ADDED : மார் 06, 2025 01:16 AM
திருப்பூர்:கரூர் மாவட்டம், கீழநஞ்சையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 60; நகை வியாபாரி. நேற்று முன்தினம் மாலையில், நகை வாங்குவதற்காக கரூரில் இருந்து காரில் கோவைக்கு சென்றார். காரை டிரைவர் ஜோதி, 60, என்பவர் ஓட்டினார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் - சம்பந்தம்பாளையம் அருகே, காரில் வந்த ஒரு கும்பல், வெங்கடேஷ் சென்ற காரை வழிமறித்தது. காரில் இருந்த நான்கு பேர், தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தி, 'காரில் கஞ்சா கடத்துவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. காரை சோதனை செய்ய வேண்டும்' என கூறினர்.
தொடர்ந்து, வெங்கடேஷ் காரில், கும்பலில் வந்த இருவர் ஏறிக் கொண்டு, தாராபுரம் நோக்கி செல்லுமாறு கூறினர். அதன்படி கார் சென்று கொண்டிருந்த போது, அவிநாசிபாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குண்டடம் பிரிவில், காரை நிறுத்தச் சொல்லி, இருவரையும் தாக்கி, 1.10 கோடி ரூபாய், மொபைல் போனை பறித்து தப்பினர். வெங்கடேஷ், புகாரின்படி, அவிநாசிபாளையம் போலீசார் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.