/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40.88 கோடிக்கு உதவி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40.88 கோடிக்கு உதவி
ADDED : ஜூலை 25, 2024 11:06 PM
திருப்பூர் : கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளில், 19,764 மாற்றுத்திறனாளிகளுக்கு, 40.88 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
12,576 பேருக்கு, 28.04 கோடி ரூபாய், மன வளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித்தொகை; 4,791 பேருக்கு, 10.29 கோடி ரூபாய், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம், 355 பேருக்கு, 55.60 லட்சம் ரூபாய், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித்தொகை; 441 பேருக்கு, 39.27 லட்சம் மதிப்பீட்டில் தொழு நோயால் பாதித்தோருக்கான உதவித்தொகை;  முதுகு தண்டுவடம் பாதித்த 94 மாற்றுத்திறனாளிகளுக்கு, 16.71 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளில் பாதுகாவலர்களுக்கு, 13.08 லட்சம் ரூபாய் பராமரிப்பு உதவித்தொகை; 42.84 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை; 36.73 லட்சம் ரூபாய் சுய தொழில் மானியம்; கை, கால் இயக்க குறைபாடுள்ளோருக்கு, 5.50 லட்சம் ரூபாய் திருமண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

