/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.75 லட்சம் காசோலை மோசடி வழக்கு; அ.தி.மு.க., கவுன்சிலருக்கு 'பிடிவாரன்ட்'

ADDED : ஆக 07, 2024 12:04 AM

திருப்பூர் : ரூபாய் 75 லட்சம் காசோலை மோசடி வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலருக்கு கோர்ட்டில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
திருப்பூர், காங்கயம் ரோட்டைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது நண்பர் கணேசன், 63. திருப்பூர் மாநகராட்சி, 52வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர். கடந்த, 2012ல், கணேசன், பழனிசாமியிடம், 75 லட்சம் ரூபாய் தொழில் மற்றும் குடும்ப செலவுக்காக கடன் பெற்றார்.
அதற்காக யூகோ வங்கியின் காசோலை கொடுத்துள்ளார். கடந்த 2013ல், காசோலை அவரது வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பியது. நேரில் கேட்ட போதும், அவர் பணத்தை திருப்பித் தரவில்லை.
இதனால், 2013ல், திருப்பூர் விரைவு நீதிமன்றத்தில் பழனிசாமி காசோலை மோசடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், கடந்த, 2019ம் ஆண்டு, கணேசனுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்தும், 75 லட்சம் ரூபாயைத் திரும்பத் தரவும் உத்தரவிட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து கணேசன், 2வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கில் கடந்த 26ம் தேதி, நீதிபதி பத்மா, விரைவு கோர்ட் தீர்ப்பை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார். மேலும், ஜாமின் இல்லாத கைது வாரன்ட் பிறப்பித்தும் உத்தரவிடப்பட்டது.