/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாழடைந்த இரட்டை பிள்ளையார் கோவில்
/
பாழடைந்த இரட்டை பிள்ளையார் கோவில்
ADDED : ஆக 12, 2024 11:42 PM

பல்லடம்:பல்லடம் அருகே பழமைவாய்ந்த இரட்டைப்பிள்ளையார் கோவில் பாழடைந்த நிலையில் உள்ளது.
பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி கிராமத்தில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த இரட்டைப் பிள்ளையார் கோவில் உள்ளது. பழங்கால முறைப்படி கருங்கற்களால் ஆன கருவறை, நாயக்கர் கால முன் மண்டபத்துடன் கோவில் கட்டப்பட்டுள்ளது. உள்ளே, நந்தி மற்றும் மூஷிக வாகனங்கள் ஒரு சேர அருகருகே அமைந்துள்ளன. கருவறையில், இரட்டைப் பிள்ளையார் அருள்பாலிப்பது வேறெங்கும் இல்லாத அதிசயம்.
பிள்ளையாருக்கு அருகிலேயே நாக சிற்பம், பக்கவாட்டில் நாகதேவி உருவம் கொண்ட சிற்பம் மற்றும் கை கூப்பிய நிலையில் பெண்ணின் சிற்பமும் அமைந்துள்ளன. கோவில் வெளிப்புற சுவர்களில் மீன் மற்றும் நாக சிற்பங்கள் உள்ளன. கருவறை கோபுரத்தில் உள்ள சிலைகள் அதிகளவு சேதமடைந்துள்ளன. கோவிலின் மேற்கூரை எப்போதும் இடிந்து விடலாம் என்ற நிலையில் பாழடைந்து தொங்கிக் கொண்டுள்ளன.
---
இச்சிப்பட்டி கிராமத்தில் பாழடைந்த நிலையில் காணப்படும் இரட்டைப்பிள்ளையார் கோவில்.
மூலவராக அருள்பாலிக்கும் இரட்டைப்பிள்ளையார்.
அருகருகே அமைந்துள்ள நந்தி, மூஷிக வாகனங்கள்.
கருவறையில் காணப்படும் நாகதேவி.

