ADDED : ஜூலை 03, 2024 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் அபாகஸ் சர்வதேச மாண்டிசோரி பள்ளியில், 45வது கோவை சகோதய எக்ஸ்டெம்பரி போட்டி கடந்த, 29ம் தேதி நடந்தது.
இதில், பள்ளி தாளாளர் வெங்கடாசலம், பள்ளி செயலாளர் சுரேஷ் பாபு, நிர்வாக இயக்குனர் அப்னா, பள்ளி முதல்வர் ராஜீவ் ரிஷி மங்கலம் ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில் கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை உள்ள மாணவர்களுக்கு, மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது. தங்கள் திறமைகளை காட்டிய மாணவர்கள் பரிசுகளை வென்று அசத்தினர்.