ADDED : மார் 25, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த வாரம் மீன் விற்பனை சுறுசுறுப்பாக இருந்தது.
நேற்று மத்தி, கிலோ 160 ரூபாய், பாறை, 110, படையப்பா, 290, இறால், 450, வாவல், 350, ஜிலேபி, 110, நண்டு, 280 ரூபாய்க்கு விற்றது. நேற்று பங்குனி மாத பவுர்ணமி மற்றும் முகூர்த்தம், இன்று பங்குனி உத்திரம், வரும் 26ம் தேதி கோவில்களில் பொங்கல் திருவிழா, குண்டம் மற்றும் தேரோட்ட நிகழ்ச்சிகள் காரணமாக, மீன் விற்பனை மந்தமாக இருந்தது. தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு வஞ்சிரம் மீன் வரத்து இல்லை. மொத்தமாக வாங்கி சென்று வெளியூர்களில் விற்பனை செய்யும் வியாபாரிகளும் குறைந்தளவு மீன்களையே வாங்கிச் சென்றனர். முப்பது டன்னுக்கும் குறைவான அளவே மீன்கள் விற்றன.

