/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆரம்ப சுகாதார நிலையங்களில் உப்பு - சர்க்கரை கரைசல் தயார்
/
ஆரம்ப சுகாதார நிலையங்களில் உப்பு - சர்க்கரை கரைசல் தயார்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் உப்பு - சர்க்கரை கரைசல் தயார்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் உப்பு - சர்க்கரை கரைசல் தயார்
ADDED : மார் 25, 2024 12:35 AM
திருப்பூர்;இம்மாத பிறப்பு முதல் கோடைக்காலம் துவங்கியது போல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சராசரியாக, 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்துவதால், வெயில் கால பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க, அதற்கான மருத்துவக் கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''வெப்பத்தின் எதிர்விளைவுகளை கையாள்வதற்கான விரிவான செயல்திட்டம் மாவட்டம் தோறும் வகுக்கப்பட வேண்டும். மருத்துவ பணி இணை இயக்குனர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்து, பருவகால நோய் தடுப்பு நடவடிக்கையை தொடர வேண்டும்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், இணை நோயுள்ளவர்களுக்காக, அனைத்து மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவில் தடுப்பு மருந்துகள், உப்பு - சர்க்கரை கரைசல் (ஓ.ஆர்.எஸ்.,) உள்ளிட்டவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
மாவட்ட சித்தா மருத்துவமனை, மருந்தகங்களில் எலுமிச்சை சாறு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவசர உதவி மற்றும் ஆலோசனைக்கு நோயாளிகள், 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

