ADDED : மார் 25, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு முருங்கைக்காய், 15 ரூபாய் அளவுக்கு விற்றதால், இல்லங்களில் சாம்பாரில் முருங்கைக்காயை பலரும் தவிர்த்தனர்.
கடந்த 15 நாட்களாக தெற்கு உழவர் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. 500 முதல், 900 கிலோ முருங்கை வருகிறது. ஒரு கட்டு முருங்கை, 70 முதல், 90 ரூபாய் வரையும், மூன்று காய், பத்து ரூபாய்க்கும் சந்தையில் கிடைக்கிறது. வரும் நாட்களில், ஒரு டன்னுக்கும் கூடுதலாக முருங்கை வர வாய்ப்புள்ளது. வரத்து மேலும் அதிகரித்தால், இன்னமும் விலை குறையும். லாபத்தை எதிர்பார்த்து முருங்கை பயிரிட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

