/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சியில் பராமரிப்பின்றி வீணாகும் மரக்கன்றுகள்
/
ஊராட்சியில் பராமரிப்பின்றி வீணாகும் மரக்கன்றுகள்
ADDED : ஆக 24, 2024 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை பெரியவாளவாடி ஊராட்சியில், சுதந்திர தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்க, 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கொண்டு வரப்பட்டது.
அன்று, 20 பேருக்கு மட்டும் மரக்கன்றுகள் வழங்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள மரக்கன்றுகள், ஊராட்சி மன்ற அலுவலகம் முன் உள்ள ரோட்டோரத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த, 10 நாட்களாக மரக்கன்றுகள் நீர் ஊற்றி பராமரிக்காமல், காய்ந்து வருகிறது.
எனவே, வீணாகி வரும் மரக்கன்றுகளை குளம், குட்டைகள், பள்ளி வளாகம், சந்தை வளாகம் மற்றும் ரோட்டோரங்களில், நடவு செய்து ஊராட்சி பணியாளர்கள் வாயிலாக பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.