/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவி மாயம்:திருப்பூரில் பரபரப்பு
/
பள்ளி மாணவி மாயம்:திருப்பூரில் பரபரப்பு
ADDED : மார் 29, 2024 01:00 AM
திருப்பூர்;திருப்பூர் புதுக்காடு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, நொய்யல் வீதி அரசு பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கிறார்.
நேற்று காலை 9:00 மணிக்கு அதே பள்ளியில், 8ம் வகுப்பு பயிலும் அண்ணனுடன் அவர் பள்ளிக்கு வந்தார். பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நேற்று இருந்ததால், 6ம் வகுப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், அவர் திரும்பி சென்றார்.
இந்நிலையில், நேற்று மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பெற்றோர் மகளைக் காணவில்லை என்று, நேற்று இரவு 9:00 மணியளவில் பள்ளிக்கு வந்தனர். தகவல் அறிந்து பள்ளி ஆசிரியர்கள், போலீசார் விரைந்தனர். பெற்றோர் மற்றும் மாணவர்களும் திரண்டனர்.'சிசிடிவி' பதிவுகளின் அடிப்படையில் போலீசார் காணாமல் போன மாணவி மற்றும் உடன் சென்ற மாணவி குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மாயமான மாணவி, மற்றொரு மாணவியின் வீட்டில் இருந்தது தெரிய வந்தது. போலீசார் மாணவிக்கு அறிவுரை கூறி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால், ஆசிரியர்கள், பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.

