ADDED : பிப் 22, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி கல்வித்துறையின் நாட்காட்டி அட்டவணையில், இன்று (22ம் தேதி) பள்ளி வேலை நாளாக குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று, எட்டாம் வகுப்பு மாணவருக்கு மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்(என்.எம்.எம்.எஸ்.,) தேர்வு, நடைபெற உள்ளதால், விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், ''அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும். 24 பள்ளி மையங்களில் தேர்வு திட்டமிடபடி நடைபெறும். மையங்களாக உள்ள பள்ளிகளும், வழக்கம் போல் செயல்படும். மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் மாற்று இடங்களை ஒதுக்கித்தர வேண்டும்,' என அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

