/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகள்; வட்டாரம் வாரியாக விவரம் சேகரிப்பு
/
தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகள்; வட்டாரம் வாரியாக விவரம் சேகரிப்பு
தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகள்; வட்டாரம் வாரியாக விவரம் சேகரிப்பு
தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகள்; வட்டாரம் வாரியாக விவரம் சேகரிப்பு
ADDED : மே 15, 2024 12:45 AM
திருப்பூர்:பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவில் எந்த வட்டாரத்தில் எவ்வளவு தேர்ச்சி இல்லை. எந்த பள்ளியில் எவ்வளவு பேர் தேறவில்லை என்ற விபரத்தை சேகரிக்கும் பணியை மாவட்ட கல்வித்துறை துவக்கியுள்ளது.
கடந்த, 10ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. திருப்பூர் மாவட்டத்தில், தேர்வெழுதிய, 30 ஆயிரத்து, 180 பேரில், 27 ஆயிரத்து, 879 பேர் தேர்ச்சி பெற்றனர்; தேர்ச்சி சதவீதம், 92.38. முந்தைய ஆண்டை விட, பத்து இடங்கள் பின்தங்கி, 21 வது இடத்துக்கு திருப்பூர் தள்ளப்பட்டதால், எந்தெந்த வட்டாரத்தில் எவ்வளவு தேர்ச்சி சதவீதம் சரிவு, எந்த பள்ளியில் அதிக பேர் தேர்ச்சி பெறவில்லை என்ற விபரங்களை சேகரிக்கும் பணியை முதன்மை கல்வி அலுவலகம் துவக்கியுள்ளது.
முதல் கட்ட விபரம் சேகரிப்பில், அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கு வட்டாரத்தில், 470 மாணவர், 224 மாணவியர் என மொத்தம், 694 பேர் தேர்ச்சி பெறவில்லை. குறைந்தபட்சமாக குண்டடம் வட்டாரத்தில், 13 பேரும், மூலனுார் வட்டாரத்தில், 14 பேரும் தேர்ச்சி பெறவில்லை.
பல்லடம் - 202, அவிநாசி - 190, தாராபுரம் - 80, குடிமங்கலம் - 40, காங்கயம் - 47, மடத்துக்குளம் - 39, , பொங்கலுார் - 39, திருப்பூர் தெற்கு - 677, உடுமலை - 116, ஊத்துக்குளி - 100, வெள்ளகோவில் - 50 பேர் தேர்ச்சி பெறவில்லை.

