நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூரில், குட்கா விற்ற 'கேக் வாக்' பேக்கரிக்கு உணவு பாதுகாப்பு துறையினர் 'சீல்' வைத்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
திருப்பூர் காங்கயம் கிராஸ் ரோட்டில் உள்ள 'கேக் வாக்' என்ற பேக்கரியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர். அதில், விற்பனை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர். முதல் முறை விற்பனை என்பதால், கடைக்கு, 25 ஆயிரம் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்தனர். கடையின் உரிமையாளர் மாணிக்கம், 42 என்பவர் மீது திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.