/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவமனைகள் பாதுகாப்பு; உறுதிப்படுத்துகிறது போலீஸ்
/
மருத்துவமனைகள் பாதுகாப்பு; உறுதிப்படுத்துகிறது போலீஸ்
மருத்துவமனைகள் பாதுகாப்பு; உறுதிப்படுத்துகிறது போலீஸ்
மருத்துவமனைகள் பாதுகாப்பு; உறுதிப்படுத்துகிறது போலீஸ்
ADDED : ஆக 22, 2024 12:25 AM

திருப்பூர் : மேற்குவங்க மாநிலம், கோல்கட்டாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கடந்த, ஆக., 8ம் தேதி, முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். இவ்விவகாரம் புயலை கிளப்பியது. அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனைகள் பாதுகாப்பை உறுதி செய்ய, டாக்டர், செவிலியர்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று, தெற்கு போலீஸ் துணை கமிஷனர் கிரிஷ்அசோக் யாதவ் தலைமையில், கே.வி.ஆர்., நகர் உதவி கமிஷனர் நாகராஜ், தெற்கு இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தினர். மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகம் பாதுகாப்பாக உள்ளதா, வாகனங்கள், வெளிநபர்கள் உள்ளே வந்து செல்ல எவ்வளவு வழிகள் உள்ளன, கண்காணிப்பு கேமராக்கள் எவ்வளவு, அவை எங்கெங்கு பொருத்தப்பட்டுள்ளன, பகல் மற்றும் இரவு நேர பாதுகாவலர் எவ்வளவு பேர் உள்ளனர், எந்தெந்த வார்டில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதும் என்பது குறித்து விபரங்களை கேட்டறிந்தனர்.
டீன் முருகேசன், மருத்துவமனை கண்காணிப்பாளர் உமாசங்கர் தலைமையில், டாக்டர், செவிலியர் துறைத்தலைவர், போலீசார் இணைந்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், சந்தேகத்துக்கு இடமான நபர்கள், பிரச்னை ஏற்படும் சூழல் உருவாகும் போது, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் டாக்டர், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் தங்கள் பாதுகாப்பு உறுதியாக உள்ளதா என்பதை ஆராய்ந்து பணியாற்றிட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.