/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.கே.ஆர்., அகாடமியில் மாணவ தலைவர்கள் தேர்வு
/
ஏ.கே.ஆர்., அகாடமியில் மாணவ தலைவர்கள் தேர்வு
ADDED : ஜூன் 25, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;அணைப்புதுார், ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளியில் ஓட்டெடுப்பு நடத்தி மாணவ தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பதவியேற்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி முதல்வர் கணேஷ் மாணவ தலைவர்களுக்கான பொறுப்புகள் மற்றும் பண்புகள் குறித்து விளக்கமளித்தார். தாளாளர் லட்சுமி நாராயணன் பேட்ச் அணிவித்து வாழ்த்துரை வழங்கினார். நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் பள்ளி மற்றும் நான்கு அணிகளின் கொடிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.