/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுய தொழில் பயிற்சி... தேசம் உயர்த்தும் முயற்சி
/
சுய தொழில் பயிற்சி... தேசம் உயர்த்தும் முயற்சி
ADDED : ஆக 25, 2024 12:35 AM

'தொழில் முனைவோர் யாரும் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகின்றனர்' என்ற நம்பிக்கை வார்த்தையுடன், கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், குறுகிய நாட்களில் சுய தொழில் பயிற்சி பெறும் வாய்ப்பை வழங்குகிறது, கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம். பயிற்சி நிலைய பயிற்றுனர் கோகுலகிருஷ்ணன் கூறியதாவது:அனுப்பர்பாளையம் புதுார், கனரா வங்கிக்கிளை மேல் மாடியில், பயிற்சி நிலையம் செயல்படுகிறது. மத்திய அரசின் கிராமப்புற அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, விவசாயம் சார்ந்த காளான் வளர்ப்பு, கோழி, தேனீ வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், ஆடு வளர்த்தல் பயிற்சிகள், 10 நாட்கள் வழங்கப்படுகிறது. வணிக தோட்டக்கலை பயிற்சி, 13 நாட்கள் வழங்கப்படுகிறது.
ஒரு மாதப் பயிற்சி
சிறு தொழில் பயிற்சிகளாக வீட்டு ஒயரிங், குளிர்சாதன பெட்டி, ஏ.சி., பழுது பார்ப்பு; கம்ப்யூட்டர் பயிற்சி, பெண்களுக்கான தையல், எம்பராய்டரி மற்றும் துணி ஓவியப்பயிற்சி, அழகுக்கலை பயிற்சி, மொலைப்போன் பழுதுபார்த்தல் மற்றும் சரி செய்தல், போட்டோ, வீடியோகிராபி பயிற்சி, ஆண்களுக்கான அழகுக்கலை பயிற்சி, யுபிஎஸ். பேட்டரி பழுதுபார்த்தல் பயிற்சி வழங்கப்படுகிறது; இவையனைத்தும், 30 நாள் பயிற்சி.மேலும், சணல் பை தயாரிப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் பயிற்சி, செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி, 13 நாட்கள் வழங்கப்படுகிறது. காகித கவர், ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி தயாரிப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பு, அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி தயாரிப்பு, துரித உணவு தயாரிப்பு, போட்டோ பிரேமிங் லேமினேஷன் மற்றும் ஸ்கிரீன் பிரின்டிங், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி ஆகியவை, 10 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.பயிற்சி பெற்றவர்கள் சுய தொழில் துவங்கவும், அதற்கு தேவையான வங்கிக்கடன் பெறவும் தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.பயிற்சி நிலையத்தை தொடர்புகொள்ள: 9489043923, 9952518441