ADDED : ஜூலை 10, 2024 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதன் ஒரு பிரிவாக, 'மானுடம் பயனுற வாழ்வதே' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கணிதவியல் துறைத்தலைவர் சிவக்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி கல்வியின் அவசியத்தை பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். வணிகவியல் துறைத்தலைவர் மலர்வண்ணன் நன்றி தெரிவித்தார்.