/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிதி அறிவுசார் நாள்' கருத்தரங்கு
/
'நிதி அறிவுசார் நாள்' கருத்தரங்கு
ADDED : ஆக 18, 2024 01:52 AM

திருப்பூர்:இந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் சார்பில், நிதி அறிவுசார் நாள் சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது.
நம் நாட்டை பொருளாதார ரீதியாக கட்டமைப்பதில் சிறந்த பங்காற்றும் இந்திய பட்டய கணக்காளர்கள், தங்களது நிதி மற்றும் வரி அறிவுசார் இயக்ககத்தின் மூலம், பொதுமக்களுக்கு நிதி மற்றும் வரி சார்ந்த விவகாரங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பொதுமக்களுக்கு, முதலீடுகள், வரி தயாரிப்பு, மற்றும் பட்ஜெட்டிங் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் கிளையில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் கிளை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
ஏ.வி.பி., கல்வி நிறுவனங்களின் தலைவர் கார்த்திகேயன், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 'வித்தியஞான் மேளா' என்ற தலைப்பில் மாணவர்கள், தொழில் முனைவோர், ஆசிரியர்களுக்கு, நிதிசார் அறிவு குறித்த கருத்தரங்கு நடந்தது.
ரோட்டரி உதவி ஆளுநர் ஆடிட்டர் ஹரிசங்கர், திருப்பூர் பயனீர் ரோட்டரி சங்கத் தலைவர் ஆடிட்டர் நவீன் குமார், செயலாளர் கேசவமூர்த்தி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். திருப்பூர் கிளை செயலாளர் தருண் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், பள்ளி -கல்லுாரி மாணவ மாணவியர், தொழில்முனைவோர் பங்கேற்றனர்.
---
இந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் சார்பில், நிதி அறிவுசார் நாள் சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில்,
ஏ.வி.பி., கல்வி நிறுவனங்களின் தலைவர் கார்த்திகேயன் பேசினார்.