ADDED : ஆக 23, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்:பெருமாநல்லுார் சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள தோட்டங்களில் கோழி, ஆடு, மாடுகளை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் திருடி செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த மாதம், 31ம் தேதி இரவு, ஈஸ்வரமூர்த்தியின் அத்திகாடு தோட்டத்தில் புகுந்த மர்ம ஆசாமிகள், 25 கோழிகளை திருடி சென்றனர்.
அதே தோட்டத்தில், 2ம் தேதி 30 கோழிகளை திருடி சென்றனர். இதேபோல், 9ம் தேதி தட்டான் குட்டை பாலசுப்பிரமணியம் தோட்டத்தில், மர்ம நபர்கள் ஒரு பசு மாட்டை திருடி சென்றனர். 21ம் தேதி வாய்க்கால் தோட்டம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் தோட்டத்தில், இரண்டு ஆடுகளை திருடி சென்றனர். பொதுமக்கள் பெருமாநல்லுார் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.அப்பகுதியினர் நேற்று போலீஸ் எஸ்.பி., அபிஷேக்குப்தாவை சந்தித்து மனு கொடுத்தனர்.

