ADDED : ஏப் 27, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.10.50 லட்சத்துக்கு எள் ஏலம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் எள் ஏலம் நடக்கிறது. அவ்கையில், நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, சுற்றுவட்டார விவசாயிகள், 35 பேர், தாங்கள் விளைவித்த, 7,518 கிலோ எள் கொண்டு வந்தனர். இதில், ஒரு கிலோ, 122.99 முதல், 144.39 ரூபாய் வரையும் ஏலம் போனது. மொத்தம், 7,518 கிலோ எள், 10 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் தெரிவித்தனர்.

