/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குட்டைத்திடலில் மொபைல் கழிப்பறை அமையுங்க
/
குட்டைத்திடலில் மொபைல் கழிப்பறை அமையுங்க
ADDED : ஏப் 22, 2024 11:16 PM
உடுமலை;உடுமலை குட்டைத்திடலில், பொதுமக்கள் அதிகம் கூடுவதால் மொபைல் கழிப்பறை அமைக்க வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, குட்டைத்திடலில் பொழுது போக்கு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கம்பம் போடப்பட்டது முதல், நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் கிராம மக்களும், குட்டைத்திடல் வருகின்றனர்.
மக்கள் கூடும் இடத்தில், அவர்களின் அவசர தேவைக்கு இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு இடமில்லாமல், திறந்த வெளியில் செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இப்பிரச்னையை தவிர்க்க, மொபைல் கழிப்பறைகள் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

