/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டில் கழிவுநீர் குளம்; வாகன ஓட்டிகள் அவதி
/
ரோட்டில் கழிவுநீர் குளம்; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 13, 2025 06:55 AM

திருப்பூர்; திருப்பூர், ராயபுரம் - தீபம் பாலம் பகுதியில் இருந்து, நொய்யல் ஆற்றின் தென்புறம் செல்லும் ரோட்டை, அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எளிதாக மங்கலம் ரோடு - அணைப்பாளையம் பிரிவு வரை சென்று சேர வசதியாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
நொய்யல் ரோட்டின் அருகே, தென்புறம் பெரிய மழைநீர் கால்வாய் கட்டி, கான்கிரீட் மூடியும் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எஸ்.ஆர்., நகருக்கு அடுத்துள்ள சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அடிக்கடி நொய்யல் ரோட்டில் தேங்குகிறது. குறிப்பாக, மழை காலங்களில், கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது.
அவ்வழியாக டூ வீலரில் செல்வோர் மீது தெறித்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள், கள ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீர் ரோட்டில் தேங்காதவாறு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, சாய ஆலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.