/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்து முன்னணி சார்பில் 26ல் சிவராத்திரி விழா
/
ஹிந்து முன்னணி சார்பில் 26ல் சிவராத்திரி விழா
ADDED : பிப் 22, 2025 07:12 AM
திருப்பூர்; திருப்பூர் ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், கடந்த 15 ஆண்டாக சிவராத்திரி விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உலக நன்மை, ஒழுக்கம், நற்பண்பு வளர்த்தல், தொழில் சிறக்க, குடும்பத்தில் செல்வம் பெருக, மாணவர்கள் கல்வியில் சிறப்புற வேண்டியும் இந்த விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு வரும் 26ம் தேதி இரவு 7:00 மணி முதல் 27ம் தேதி காலை 6:00 மணி வரை சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.
புது பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் நான்கு கால பூஜை நடைபெறும். ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, பூமாலை கட்டும் போட்டி, ஆன்மிக வினாடி வினா ஆகியனவும் நடைபெறவுள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

