/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டுக்குள் 'வில்லங்க' சாய ஆலை பைக் தேடுதல் வேட்டையில் 'ஷாக்'
/
வீட்டுக்குள் 'வில்லங்க' சாய ஆலை பைக் தேடுதல் வேட்டையில் 'ஷாக்'
வீட்டுக்குள் 'வில்லங்க' சாய ஆலை பைக் தேடுதல் வேட்டையில் 'ஷாக்'
வீட்டுக்குள் 'வில்லங்க' சாய ஆலை பைக் தேடுதல் வேட்டையில் 'ஷாக்'
ADDED : ஆக 30, 2024 10:44 PM

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை.
நேற்று அதிகாலை 3:00 மணி.
மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி, வீதிகள் வாரியாக வாட்டர்மேன் கவுரிசங்கர் தண்ணீர் வினியோகம் மேற்கொண்டிருந்தார்.
அருகே, சாவியுடன் பைக்கை நிறுத்தியிருந்தார். திடீரென இளைஞர் ஒருவர், இந்த பைக்கை எடுத்துக்கொண்டு 'பறந்தார்'. வாட்டர்மேன் உள்ளிட்டோர் விரட்டிச் சென்றனர்.
அருகில் உள்ள சத்யா காலனியில், ரேவதி தியேட்டர் அருகே உள்ள வீடு அருகே பைக்கை நிறுத்திவிட்டு, அங்கிருந்த வீட்டுக்குள் இளைஞர் புகுந்தார்.
விரட்டிச்சென்றவர்கள், பைக்கை மீட்டு, இளைஞரை வீட்டுக்குள் தேடிச்சென்று பிடித்தனர். இளைஞர், போதையில் இருந்ததும், தனது பைக்கை விட்டுவிட்டு, ஒரே மாதிரி இருந்த வாட்டர்மேனின் பைக்கை ஓட்டிக்கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இங்கேதான் 'ட்விஸ்ட்'
அந்த இளைஞர் சென்ற வீட்டுக்குள் 'சாம்பிள் விஞ்ச்' மூலம், துணிகளுக்குச் சாயம் தோய்க்கும் பணி நடந்தது. வீட்டு பின்புறம் ஏழு அடி ஆழ குழி வெட்டி கழிவுநீர் தேக்கப்பட்டிருந்தது.
வீடு வாடகைக்கு எடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநகராட்சி குடிநீர் இணைப்பு, வீட்டுமின் இணைப்பை பயன்படுத்தி, இப்படி ஒரு முறைகேடு 'சாய ஆலை' செயல்பட்டு வந்துள்ளது. வீட்டு காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி, நீராவி தயாரித்துள்ளனர். வீடுகளில் பயன்படுத்தும், வாஷிங் மெஷின்களை கொண்டு, துணிகளைக் காய வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது.
-----
திருப்பூர், சத்யா காலனியில் சாய ஆலை செயல்பட்டு வந்த வீடு.
'சாம்பிள் விஞ்ச்' மூலம் துணிகளுக்குச் சாயம் தோய்க்கும் பணி நடந்துள்ளது.
வாஷிங் மெஷின் மூலம் துணிகள் காய வைக்கப்பட்டுள்ளன.
சாயமேற்றுவதற்கு மாநகராட்சி குடிநீர் இணைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
சாயக்கழிவுநீர் தேக்கிவைக்கப்பட்டிருந்த குழி.