/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுடு... சுடு இலக்கைச் சுடு; உருவாகிறார் 'மனு பாக்கர்'
/
சுடு... சுடு இலக்கைச் சுடு; உருவாகிறார் 'மனு பாக்கர்'
சுடு... சுடு இலக்கைச் சுடு; உருவாகிறார் 'மனு பாக்கர்'
சுடு... சுடு இலக்கைச் சுடு; உருவாகிறார் 'மனு பாக்கர்'
ADDED : ஆக 28, 2024 11:59 PM

திருப்பூர் 'துப்பாக்கி சுடுதலில் சாதிக்க முயல்பவர்கள் நுணுக்கத்துடன் செயல்பட்டால்தான் லட்சியம் நிறைவேறும்' என்று கூறுகிறார், திருப்பூரை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை, தனிஷ்கா. பஞ்சாப், ம.பி., புதுடில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட நாடு முழுதும் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று, ஜொலித்துள்ளார். கடந்த மாதம், பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தேர்வு போட்டியில் பங்கேற்றார்.
பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவியான தனிஷ்கா கூறியதாவது:
எந்த விளையாட்டு போட்டியாக இருந்தாலும், சாதிக்க ஆர்வம் தான் மிக முக்கியம். துப்பாக்கி சுடுதலில் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்லும் போது, எனக்குள் ஆர்வம் அதிகமானது. அதுவே, இந்த நிலைக்கு அழைத்துச் சென்றது. விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் கட்டாயம் உண்டு. அதற்காக சோர்ந்து போகாமல், விடாமுயற்சியுடன் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். துப்பாக்கி சுடுதலில் சாதிக்க முயல்பவர்கள் பொறுமை, கவனம், நுணுக்கம் கற்றுத்தேற வேண்டும். அப்போது தான், லட்சியம் நிறைவேறும். இவ்வாறு, தனிஷ்கா கூறினார்.

