/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஓட்டுப்பதிவுக்கு பின் கட்டுப்பாடு தளர்த்தாவிட்டால் கடையடைப்பு'
/
'ஓட்டுப்பதிவுக்கு பின் கட்டுப்பாடு தளர்த்தாவிட்டால் கடையடைப்பு'
'ஓட்டுப்பதிவுக்கு பின் கட்டுப்பாடு தளர்த்தாவிட்டால் கடையடைப்பு'
'ஓட்டுப்பதிவுக்கு பின் கட்டுப்பாடு தளர்த்தாவிட்டால் கடையடைப்பு'
ADDED : ஏப் 13, 2024 11:47 PM

திருப்பூர்;ஓட்டுப்பதிவுக்கு பின் கட்டுப்பாடுகளை தளர்த்தா விட்டால், கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுமென, திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை எச்சரித்துள்ளது.
திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.
தேர்தல் கமிஷன், ஓட்டுப்பதிவுக்கு பிறகும், ஜூன் 4 ம் தேதி வரை, பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது குறித்து ஆலோசனை நடத்தினர். அதன்படி, ஓட்டுப்பதிவுக்கு பிறகு, கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு:
ஓட்டுப்பதிவுக்கு பிறகும், ஜூன், 4ம் தேதி வரை பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படும் என்ற அறிவிப்பு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும், 19ம் தேதிக்கு பிறகு, இத்தகைய கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள வேண்டும்; தேர்தல் கமிஷன் மறுத்தால், வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

