/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய விளையாட்டு போட்டி; சாம்பியன் பட்டம் பெற்ற பள்ளிகள்
/
குறுமைய விளையாட்டு போட்டி; சாம்பியன் பட்டம் பெற்ற பள்ளிகள்
குறுமைய விளையாட்டு போட்டி; சாம்பியன் பட்டம் பெற்ற பள்ளிகள்
குறுமைய விளையாட்டு போட்டி; சாம்பியன் பட்டம் பெற்ற பள்ளிகள்
ADDED : செப் 13, 2024 11:54 PM
திருப்பூர் : திருப்பூர் தெற்கு குறுமைய போட்டியில், பிரன்ட்லைன், விவேகானந்தா வித்யாலயா, வடக்கு குறுமைய போட்டியில், அய்யங்காளிபாளையம், வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பள்ளி கல்வித்துறை சார்பில், ஆக., 12ம் தேதி துவங்கி மூன்று வாரங்கள் குறுமைய விளையாட்டு போட்டிகள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்டது. தனிநபர், குழு விளையாட்டு போட்டிகளில் திறமை காட்டி, முதலிடம் பெற்றவர்கள், மாவட்ட விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
திருப்பூர் தெற்கு குறுமைய போட்டியில், மாணவர் பிரிவில் ஒட்டு மொத்தம் சாம்பியன் பட்டத்தை மாணவர் பிரிவில், பிரன்ட்லைன் அகாடமி, மாணவியர் பிரிவில் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி கைப்பற்றியது.
14 வயது மாணவர் பிரிவில் கே.எஸ்.சி., பள்ளி மாணவர் சுபம்சஹானி, மாணவியர் பிரிவில், விவேகானந்தா பள்ளி சர்விகா. 17 வயது மாணவர் பிரிவில், பிரன்ட்லைன் அகாடமி முகமதுசலாம், மாணவியர் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி பிரேமா, 19 வயது பிரிவில் விவேகானந்தா பள்ளி பிரவீன், அத்யா ஆகியோர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
வடக்கு குறுமைய சாம்பியன் பட்டத்தை, மாணவர் பிரிவில், அய்யங்காளிபாளையம், வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவியர் பிரிவில், ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி (மாணவியர்) கைப்பற்றியது. 14 மற்றும் 17 வயது மாணவர் பிரிவில், முறையே தவேஷ் (ஏ.வி.பி., மெட்ரிக்), முகேஷ் (நைருதி பள்ளி) சாம்பியன் பட்டம் பெற்றனர்.
19 வயது பிரிவில் பிரபாகரன், பாக்கியகோகுல் (ஜெய்சாரதா பள்ளி) சின்னச்சாமி அம்மாள் பள்ளி மாணவர் பாரத் மூவரும் ஒரே புள்ளி (15 புள்ளி) பெற்றதால், மூவருக்கு சாம்பியன் பட்டம் பகிர்ந்து வழங்கப்பட்டது.
மாணவியர் பிரிவில் ஷாகினி, சாருஹாசினி, (ஜெய்வாபாய் பள்ளி), 19 வயது பிரிவில், பிரியதர்ஷினி (அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி). தடகள போட்டிகளை பொறுத்தவரை மாணவியர் பிரிவில் ஜெய்வாபாய் பள்ளி, மாணவர் பிரிவில் ஜெய்சாரதா பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.