/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய த்ரோ பால் போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி வெற்றி
/
குறுமைய த்ரோ பால் போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி வெற்றி
ADDED : ஆக 24, 2024 01:54 AM

உடுமலை;உடுமலை குறுமைய போட்டிகளில், த்ரோ பால் போட்டிகளில் வெற்றி பெற்ற கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உடுமலை சுற்றுவட்டார அளவிலான குறுமைய போட்டிகள் நடக்கிறது. மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாலிபால் போட்டி நடந்தது. இப்போட்டியில் கொங்கல் நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
மாணவியருக்கான வாலிபால் போட்டியில், ஜூனியர் பிரிவில் இரண்டாமிடமும், மாணவர்களுக்கான போட்டியில் சீனியர் பிரிவில் முதலிடத்திலும் இப்பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.
மாணவர்களுக்கான த்ரோபால் சீனியர் பிரிவில் முதலிடம், பால்பேட்மிட்டன் சூப்பர் சீனியர் பிரிவில் இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஆக்ஸ்போர்டு பள்ளி தாளாளர் சின்னராசு, ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.