/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறன்மிகு தொழிலாளர்கள் பற்றாக்குறை; நிரப்பப்படாத 2 லட்சம் வேலை வாய்ப்பு
/
திறன்மிகு தொழிலாளர்கள் பற்றாக்குறை; நிரப்பப்படாத 2 லட்சம் வேலை வாய்ப்பு
திறன்மிகு தொழிலாளர்கள் பற்றாக்குறை; நிரப்பப்படாத 2 லட்சம் வேலை வாய்ப்பு
திறன்மிகு தொழிலாளர்கள் பற்றாக்குறை; நிரப்பப்படாத 2 லட்சம் வேலை வாய்ப்பு
ADDED : பிப் 27, 2025 11:16 PM

திருப்பூர், ; ''திறன்மிகு தொழிலாளர் பற்றாக்குறையால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தித்துறையில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் உள்ளன'' என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.
ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் திறன் இடைவெளியை குறைத்து, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக, 'டைட்டன் லீப்' மையம், திருப்பூர், காலேஜ் ரோட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு இடைவெளி
இதை திறந்துவைத்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது: திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையில் திறன்மிகு தொழிலாளர் பற்றாக்குறையால், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த காலங்களில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் 500 தொழிலாளர்கள் வரை பணிபுரிந்தனர். ஆனால் இன்றைய காலத்தில், ஒரு நிறுவனத்தில், 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் தொழிலாளர் வரை பணி புரிகின்றனர்.
ஒரு நிறுவனத்தின் தொழிலாளர் எண்ணிக்கையை, 15 ஆயிரமாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'டைட்டன் லீப்' திறன் மேம்பாட்டு மையம், வேலைவாய்ப்பு இடைவெளியை குறைப்பதிலும், போட்டித்தன்மையை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்குவகிக்கும்.
சந்தைப் பங்களிப்புஇரட்டிப்பாக்க சபதம்
திருப்பூரின் ஆற்றல் திறன், சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து ஆயத்த ஆடைகளை வாங்கும் நிறுவனங்களை ஈர்க்கிறது. திருப்பூர் மகத்தான ஆற்றலை கொண்டுள்ளது. வாய்ப்புகளை பயன்படுத்தி, சந்தை பங்களிப்பை இரட்டிப்பாக்க ஏற்றுமதியாளர்கள் சங்கம் உறுதிபூண்டுள்ளது.
இவ்வாறு, சுப்பிரமணியன் பேசினார்.
ஏற்றுமதியாளர் சங்க இணைச்செயலாளர் குமார் துரைசாமி பேசுகையில், ''அடுத்த 50 ஆண்டுகளில், நாட்டின் இளம் பணியாளர்கள் மிகப்பெரிய அனுகூலமாக இருப்பர். சீனா, ஐரோப்பா போன்ற உலகளாவிய சந்தைகளிலிருந்து ஆர்வத்தை ஈர்ப்பார்கள். வளர்ந்துவரும் திருப்பூர் தொழில்துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய, டைட்டன் லீப் போன்ற திறன் மேம்பாட்டு மையங்கள் மிகவும் அவசியமாகின்றன. இந்தியாவில், ஆயிரம் ஊழியர்களில் 650 பேர் பெண்கள். இம்மையம், பெண்களுக்கு மேலும் அதிகாரம் அளித்து, அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்'' என்றார்.
'டைட்டன் லீப்' மைய துணைத்தலைவர் ஸ்ரீதர், தலைவர் டொமினிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்றைய காலத்தில், ஒரு நிறுவனத்தில், 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் தொழிலாளர் வரை பணிபுரிகின்றனர். ஒரு நிறுவனத்தின் தொழிலாளர் எண்ணிக்கையை, 15 ஆயிரமாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

