/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிந்து மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபாரம்
/
சிந்து மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபாரம்
ADDED : செப் 12, 2024 11:19 PM

திருப்பூர் : தாராபுரம் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளில், சிந்து மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பல்வேறு வெற்றிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். மிக மூத்தோர் பிரிவில், ஈட்டி எறிதலில், இப்பள்ளி மாணவி, தீப்ஷிகா முதலிடம், மூத்தோர் பிரிவு 100 மீ., ஓட்டத்தில் சஜீவன் முதலிடம், அஸ்வின் சிங் 800 மீ., மற்றும் 400 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம், மும்முறை தாண்டுதலில் கவுதம் மூன்றாமிடம், 1,500 மீ., ஓட்டத்தில் சாந்தனு மூன்றாமிடம் பெற்றனர்.
இளையோர் பிரிவில், ரித்தீஸ்வரன் 400 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம்; யோகேஷ் 100 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம், 400 மீ., தொடர் ஓட்டத்தில், சபரி, ஸ்ரீராம், யோகேஷ், முகமது செரீப் அணி மூன்றாமிடமும் பெற்றது.
இதுதவிர, குழு போட்டிகளிலும், இப்பள்ளி மாணவ, மாணவியர் அபார வெற்றி பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சிந்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனர் கோபாலன், தாளாளர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.