/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சித்தர் ஜீவசமாதி தரிசனம் நல்வாழ்க்கைக்குரிய வழி'
/
'சித்தர் ஜீவசமாதி தரிசனம் நல்வாழ்க்கைக்குரிய வழி'
ADDED : ஆக 11, 2024 11:41 PM

திருப்பூர்:சித்தர்கள் மகரிஷிகள் ஜீவசமாதி புனரமைப்பு வழிபாடு அறக்கட்டளை, திருப்பூரில் இயங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள சித்தர்களின் ஜீவசமாதி புனரமைப்பு பணிகளுடன், பக்தர்களை அழைத்து சென்று வழிபாடும் நடத்தப்படுகிறது.
திருப்பூரில் இருந்து, ஒவ்வொரு மாதமும், ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில், ஜீவசமாதி தரிசனம் செய்யும் பயணம் மேற்கொள்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சித்தர் ஜீவசமாதிகளுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
அறக்கட்டளை தலைவர் பிரதோஷ சிவா, செயலாளர் ஞானவேலன் கூறுகையில், 'சித்தர்கள், பிரபஞ்ச உயிர் மிக்க ஆற்றலுடன ஜீவசமாதி அடைந்து, வாழும் மனிதர்களின் பிரச்னைகளை தீர்க்க, எதிர்பார்ப்பின்றி நன்மையை செய்து வருகின்றனர். இதுபோன்ற ஜீவசமாதிகளை மக்கள் தரிசனம் செய்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
சித்தர் கோவிலை தரிசிப்பதன் வாயிலாக, மனித கர்மாவுக்கு தீர்வு கண்டு, குடும்பம் மகிழ்ச்சியாக வாழ வழிபிறக்கும்,' என்றனர்.

