/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னச் சின்ன குறைகள்... சரிசெய்தால் சங்கடம் இல்லை
/
சின்னச் சின்ன குறைகள்... சரிசெய்தால் சங்கடம் இல்லை
சின்னச் சின்ன குறைகள்... சரிசெய்தால் சங்கடம் இல்லை
சின்னச் சின்ன குறைகள்... சரிசெய்தால் சங்கடம் இல்லை
ADDED : ஜூன் 25, 2024 12:48 AM
திருப்பூர்;திருப்பூரில், பெருமளவு மக்கள், வாகனங்கள் பயன்படுத்தும் ரோடுகளில் பல இடங்களில் பாதுகாப்பு குறைவாகவே காணப்படுகிறது.
பல ரோடுகளில் பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழிகள் ரோட்டிலிருந்து உயரமாக அமைந்துள்ளன. சில பகுதிகளில் குடிநீர் குழாய்களுக்கான கன்ட்ரோல் வால்வுகள் அமைந்துள்ள இடங்கள் திறந்த நிலையிலும், சில இடங்களில் சிலாப் கொண்டு மூடி உயரமாகவும் காட்சியளிக்கிறது.
ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே கேட் வால்வு ரோட்டுக்கு மேல் நீட்டிக் கொண்டுள்ளது.மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் சிதிலமடைந்தும், சில இடங்களில் முறையாக மூடி அமைக்கப்படாமலும், பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக உள்ளன. கொங்கு நகர், மாநகராட்சி பள்ளி எதிரே கழிவு நீர் வடிகால் மூடி இன்றி திறந்த நிலையில் உள்ளது. தினமும் ஏராளமான மாணவர்கள் இவ்வழியாகச் செல்கின்றனர்.
வடிகால் அமைப்புகளில் ரோடுகளின் குறுக்கில் சிறுபாலம் கட்டிய இடங்களில் ரோட்டுடன் இணைக்கும் வகையிலான அணுகு சாலை அமைக்கப்படாமல் வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை உள்ளது. ராயபுரம், விநாயகபுரத்தில் வடிகாலுக்காக அமைக்கப்பட்ட சிறுபாலம் மீது அணுகு சாலை அமைக்காமல் இடைவெளியுடன் ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
வார்டு வாரியாக பணியாற்றும் மாநகராட்சி ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகளாக உள்ள வார்டு கவுன்சிலர்கள் இது போன்ற குறைகள் குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.