/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆரோக்கியத்துடன் வாழ சிறுதானிய உணவு அவசியம்'
/
'ஆரோக்கியத்துடன் வாழ சிறுதானிய உணவு அவசியம்'
ADDED : செப் 15, 2024 01:21 AM
பொங்கலுார்: பொங்கலுார் சின்னாரியபட்டியில் சோளம் செயல் விளக்க திடல் பயிற்சி முகாம் நடந்தது. இதில் பூச்சி நோய் மேலாண்மை, இயற்கை உரம், ஊட்டமேற்றிய தொழு உரம், பயிர் சுழற்சி, வருமுன் காப்பது, மண்ணுக்கேற்ற பயிர், பயிருக்கு ஏற்ற உரம், சோளம் சாகுபடியில் அதிக மகசூல், உயர் விளைச்சல் ரகம், இயற்கை விவசாயிகள் பதிவு ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மாவட்ட உணவு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அரசப்பன் பேசுகையில், 'ஆரோக்கியமாக வாழ ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களை சாப்பிட வேண்டும்'என்றார்.
கண்டியன் கோவில் ஊராட்சி தலைவர் கோபால், பொங்கலுார் வேளாண் உதவி இயக்குனர் பொம்முராஜ், துணை வேளாண் அலுவலர் ராஜசேகரன், அங்கக விதை சான்று அலுவலர் ஹேமா, உதவி வேளாண் அலுவலர் பால்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.