/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வகுப்பறைக்குள் பாம்பு பெற்றோர் அதிர்ச்சி
/
வகுப்பறைக்குள் பாம்பு பெற்றோர் அதிர்ச்சி
ADDED : செப் 10, 2024 02:33 AM

பல்லடம்:பல்லடம் அருகே, பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து படமெடுத்த பாம்பு மீட்கப்பட்டு, வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
பல்லடம் அடுத்த, கரடி வாவி எஸ்.எல்.என்.எம்., அரசு உதவி பெறும் பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று இப்பள்ளி வகுப்பறைக்குள் இரண்டரை அடி நீளமுள்ள நாக பாம்பு புகுந்தது. மாணவர்கள் அலறியடித்து ஓட்டமெடுத்தனர்.
பாம்பு பிடி வீரர் வரவழைக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் பயன்படுத்தும் டெஸ்க் உள்ளே புகுந்த பாம்பு, படம் எடுத்தபடி நின்று அச்சுறுத்தியது. பதினைந்து நிமிட முயற்சிக்கு பின், பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
பள்ளிக்கு போதிய சுற்றுச்சுவர் இல்லாமல், பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பல இடங்களில் புதர்கள் மண்டி உள்ளதால், விஷ ஜந்துக்கள் பள்ளி வளாகத்துக்குள் வரும் சூழல் உள்ளது. பள்ளி வகுப்பறையின் சில ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளனர்.

