sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூட்டுக்குடிநீர் திட்ட பிரச்னைகளுக்கு தீர்வு? ஒன்றிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க மனு

/

கூட்டுக்குடிநீர் திட்ட பிரச்னைகளுக்கு தீர்வு? ஒன்றிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க மனு

கூட்டுக்குடிநீர் திட்ட பிரச்னைகளுக்கு தீர்வு? ஒன்றிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க மனு

கூட்டுக்குடிநீர் திட்ட பிரச்னைகளுக்கு தீர்வு? ஒன்றிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க மனு


ADDED : செப் 11, 2024 10:22 PM

Google News

ADDED : செப் 11, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பு மற்றும் வினியோக பணியை ஒன்றிய நிர்வாகங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளுக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட, கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

கடந்த, 2017ல், 54.14 கோடி ரூபாய் செலவில், இந்த புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

ஆனால், இன்று வரை, பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளது.கடைக்கோடி கிராமங்களில், கூட்டுக்குடிநீர் திட்டத்தில், பற்றாக்குறையாகவே வினியோகம் உள்ளது.

ஒன்றிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், குடிநீர் வடிகால் வாரியத்தினரை உள்ளடக்கிய ஆலோசனைக்கூட்டம் பல முறை நடத்தியும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.

இது குறித்து, தமிழக அரசுக்கு குடிமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த கிராம மக்கள் அனுப்பியுள்ள மனு:

ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினரிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும், குடிநீர் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினால், குடிநீர் வடிகால் வாரியத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கின்றனர்.

ஆனால், அத்துறையில், குறைந்தளவு அதிகாரிகளே இருப்பதால், யாரையும் தொடர்பு கொள்ள முடிவதில்லை. கிராமங்களுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது; வினியோகம் எவ்வளவு என்ற எந்த தகவலும் தெரிவதில்லை.

குழாய் உடைப்பு ஏற்பட்டால், சீரமைக்க பல மாதங்களாகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பு மற்றும் வினியோகத்தை, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகங்களிடம் வழங்கினால், பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். இது குறித்து, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us