/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சில வரி செய்திகள்... விஜய் கட்சியினர் அன்னதானம்
/
சில வரி செய்திகள்... விஜய் கட்சியினர் அன்னதானம்
ADDED : செப் 09, 2024 11:30 PM
விஜய் கட்சியினர் அன்னதானம்
திருப்பூர் மாநகர் மாவட்ட த.வெ.க., கொங்கு நகர் பகுதி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா எஸ்.வி., காலனியில் நடைபெற்றது. விழாவையொட்டி, பொதுமக்களுக்கு நேற்று காலை அன்னதானம் வழங்கப்பட்டது. கட்சியின் கொங்கு நகர் பகுதி துணை தலைவர் பூபதி ராஜா, தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திக், முன்னிலை வகித்தார். பொருளாளர் சாந்து முகமது, வரவேற்றார். கிளை தலைவர் சரவணகுமார், அன்னதானத்தை துவக்கி வைத்தார். விழாவில், இணை செயலாளர் ரபீக் மற்றும் நிர்வாகிகள் மோகன் குமார், சதீஷ், தனசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
---
சாலை சீரமைக்க கவுன்சிலர் மனு
திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ், கலெக்டரிடம் அளித்த மனுவில், 'சிறுபூலுவபட்டி அமர்ஜோதி கார்டன் முதல் அணைப்பாளையம் மேம்பாலம் வரை காஸ் குழாய் பதிக்க ரோட்டின் ஒரு பக்கம் குழி தோண்டப்பட்டது. குழி மூடப்பட்டு, கான்கிரீட் போடப்பட்டது. சரியாக பணி நடக்காததால், அந்த சாலை குண்டும், குழியுமாக மாறி, 40 அடி ரோடு 15 அடியாக குறுகி விட்டது. இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கூறியுள்ளார்.
---
கவுன்சிலர் மீது புகார் மனு
திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய மனுவில், 'மாநகராட்சி, 52வது வார்டு கவுன்சிலர் கணேசன் (அ.தி.மு.க.,), மீது, காசோலை மோசடி வழக்கில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு மீதான மேல் முறையீட்டில் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில், இவ்வழக்கின் தீர்ப்பு குறித்து குறிப்பிடாமல் இருப்பின், அவரை கவுன்சிலர் பதவியிலிருந்து விலக்க வேண்டும்,' என கூறியுள்ளார்.
---
பி.ஏ.பி.,ல் பெண் உடல் மீட்பு
பல்லடம் அருகே சுல்தான்பேட்டை, சின்ன வதம்பச்சேரியை சேர்ந்தவர் வசந்தாமணி, 55. இவருக்கு வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த, 4ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் மணிகண்டன் சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார் தேடி வந்த நிலையில், பொங்கலுார் ஒன்றியம், ஆண்டிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் அவரது உடலை அவிநாசி பாளையம் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
---
தி.மு.க., இளைஞரணி கூட்டம்
திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில், இளைஞர் அணி அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. முத்தணம்பாளையம் ரோடு, கணேஷ் பத்மாவதி மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட இளைஞர் அணி யெலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் ராஜூ வரவேற்றார். இளைஞர் அணியில் இணைந்தவர்களுக்கு அடையாள அட்டையை அமைச்சர் சாமிநாதன் வழங்கி பேசினார். வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், எம்.பி., பிரகாஷ், நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ் முன்னிலை வகித்தனர்.
---

