ADDED : ஏப் 27, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:ஊதியூர், நிழலியை சேர்ந்தவர் தங்கராசு, 63. மகன், மகளுடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தேங்காய் உடைக்கும் களத்துக்கு வேலைக்கு சென்று வருகிறார். இவரின் மகன் சேகர், 39 அடிக்கடி மதுபோதையில் வீட்டில் தகராறு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சேகர் மதுபோதையில், தந்தை, தங்கையிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து தாக்கினார். புகாரின் பேரில், சேகர் மீது, நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஊதியூர் போலீசார் கைது செய்தனர்.

