/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள்
/
இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள்
ADDED : ஏப் 27, 2024 12:50 AM
திருப்பூர்:வார இறுதி நாட்களில் வெளியூர், பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்களை ஒவ்வொரு வாரமும் இயக்குகிறது.
அவ்வகையில், இன்றும், நாளையும் திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15, கோவில்வழியில் இருந்து, 20, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15 என மொத்தம், 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கடந்த, 23ம் தேதியுடன் பள்ளிகள் முடிவடைந்தது.
நேற்றுடன் கல்வியாண்டு நிறைவடைந்து, பள்ளி திறப்பு தேதி குறிப்பிடாமல், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்றும், நாளையும் பஸ்களில் ஓரளவு கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரம், கடந்த வாரம் தேர்தலை ஒட்டி பலரும் மூன்று நாள் பயணமாகியதால், இந்த வாரம் கூட்டம் அதிகரிக்குமா என்ற கேள்வியும், போக்குவரத்து கழக அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

