/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு சிகிச்சை: கலெக்டர் உத்தரவு
/
சிறப்பு சிகிச்சை: கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூன் 22, 2024 12:45 AM
அவிநாசி;தெக்கலுார் அருகே வடக்கு புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் 43, யோக மீனாட்சி 42. இருவரும், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள்.
அவிநாசியில் நடைபெற்ற 'உங்களைத் தேடி உங்கள் ஊர்' திட்டத்தில், தங்கள் ஒன்றரை வயது குழந்தையின் இடது கால் வளர்ச்சி குறைபாடு சிகிச்சைக்காகவும், அரசின் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையும் கேட்டு மனு அளித்தனர்.
மனுவை பெற்ற கலெக்டர் கிறிஸ்துராஜ், உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் அலுவலர் வசந்த ராம்குமாரை அழைத்து தம்பதியினர் இருவருக்கும் காதொலிக்கருவியை வழங்க அறிவுறுத்தினார். தம்பதிர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை திருப்பூர் மாவட்டத்தில் இணைத்து தொகை பெற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். குழந்தைக்கு பேச்சு பயிற்சி, காது கேட்கும் திறன் பயிற்சி ஆகியவற்றிக்கான சிறப்பு பேச்சு பயிற்சியாளரிடம் சிகிச்சை அளிக்கவும், கலெக்டர் அறிவுறுத்தினார்.