/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி மெடிக்கல் சென்டரில் சிறப்பு மருத்துவ முகாம்
/
ரேவதி மெடிக்கல் சென்டரில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : செப் 02, 2024 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டரில் குடலிறக்கம் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் தொடர்பான சிறப்பு மருத்துவ முகாம், பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் நிபுணர் ஹர்ஷா நாராயணன் தலைமையில், இரு நாட்கள் நடந்தது.
இதில், 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். முகாமில், 1500 ரூபாய் மதிப்புள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், 500 ரூபாய் சலுகைக்கட்டணத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. பிற பரிசோதனைகள் சிகிச்சைகளுக்கு 30 முதல் 50 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக 15 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இத்தகவலை ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர்ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.