/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ சக்தி சர்வதேசப் பள்ளியில்விளையாட்டு விழா அமர்க்களம்
/
ஸ்ரீ சக்தி சர்வதேசப் பள்ளியில்விளையாட்டு விழா அமர்க்களம்
ஸ்ரீ சக்தி சர்வதேசப் பள்ளியில்விளையாட்டு விழா அமர்க்களம்
ஸ்ரீ சக்தி சர்வதேசப் பள்ளியில்விளையாட்டு விழா அமர்க்களம்
ADDED : ஆக 23, 2024 11:36 PM

திருப்பூர்:அவிநாசி அருகே தெக்கலுாரிலுள்ள ஸ்ரீசக்தி சர்வதேசப் பள்ளியில், விளையாட்டு விழா நடந்தது.
முகில், தென்றல், அனல், புனல் என, மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து, அணிவகுப்பு நடத்தினர். பின், விளையாட்டு விழா நடத்தப்பட்டது.
முதல் வகுப்பு துவங்கி, 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் நடனம், பார்வையாளர்களை கவர்ந்தது. சிலம்பம், டேக்வோண்டோ, ஜூடோ, கராத்தே, யோகா போன்ற தற்காப்பு கலைகளை மாணவர்கள் நிகழ்த்தினர். குதிரையேற்ற சாகசம், வியக்க வைத்தது.
நீளம், உயரம் தாண்டுதல், குண்டெறிதல், 100, 200, 400 மீ., ஓட்டம் மற்றும் தடை தாண்டும் போட்டி நடத்தப்பட்டது. தென்றல் அணி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
சிறப்பு விருந்தினராக கோவை வி.ஜி.எம்., மருத்துவமனை தலைவர் சுமன் பங்கேற்றார். பள்ளி துணைத்தலைவர் தீபன், ஸ்ரீ சக்தி குழுமத் தலைவர் தங்கவேலு ஆகியோர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, தேசிய ஹேண்ட்பால் வீரர் கார்த்திகேயன், சக்தி பாலாஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பள்ளி முதல்வர் குமுதா நன்றி கூறினார்.

